நாமக்கல் மாவட்டத்தில் - 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கங்கள், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க நிகழ்ச்சிகள், எல்லைக்காவல் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலங்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இரு தொகுதிகளுக்கு ஒரு மின்னணு வீடியோ வாகனம் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் மா. பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்