டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை மீட்க சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி பேசினார்.
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:
தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்க இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படவில்லை. பெண்கள் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸ் அதிகாாி அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளார். நீதிமன்றம் தலையிட்ட பின்புதான், அந்த அதிகாரி தண்டிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் 23 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலையில்லை. பெண்கள் குடிநீருக்காகவும், ரேஷனுக்காகவும் காத்துக்கிடக்கின்றனர். திமுக ஆட்சி வந்தவுடன் அரசுத்துறையில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது. நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
அதிமுக ஆட்சியில் எல்லா பணிகளுக்கும் கமிஷன் வாங்குகின்றனர். கரோனா நிவாரணப் பணிகளில் கூட கமிஷன் வாங்கியுள்ளனர். முதல்வரின் சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகிறது.
வேளாண் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, இப்போது அதை திரும்பப்பெற வலியுறுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என குழப்பமான துறையாக பள்ளிக்கல்வித்துறை உள்ளது. அரசை எதிா்த்து கேள்வி கேட்டால் அவா்கள் பழிவாங்கப்படுகிறாா்கள். அதிமுக ஆட்சி டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தமிழகத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago