திருநெல்வேலி ஜாக்டோ ஜியோகூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பால்ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணுவிடம் அளித்த மனு விவரம்:
வாக்குச்சாவடி நிலை அலுவலர் 2-க்கான பணி பெரும்பாலும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல்உதவியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களது கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு ஆகும். இதனால் அவர்கள் படிவங்களை கையாளுவதில் சிரமம் உள்ளது. எனவே, தேர்தல் பணியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முடியாதபட்சத்தில் அவர்களுக்கு விரலில் மை வைப்பதற்கான பணியை கொடுக்க வேண்டும்.
எந்த தேர்தலிலும் இல்லாதவகையில் இந்த முறை, முதல்பயிற்சி வகுப்பிலேயே 95 சதவீதம் ஆசிரியர் களுக்கு தபால்வாக்கு பெறுவதற்கான படிவம் 12ஐவழங்கியதுடன், அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. காவல் துறைஊழியர்கள் ஒரே நாளில் ஓரிடத்தில் தபால் வாக்கு செலுத்துவதுபோன்று, ஆசிரியர்களும், அரசுஊழியர்களும் தேர்தல் பணிக்குசெல்லும் முன்பாக ஒவ்வொருசட்டப்பேரவை தொகுதியிலும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தி 100 சதவீதம் முழுமையாக வாக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு என்பதால் அவர்கள் படிவங்களை கையாளுவதில் சிரமம் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago