திருப்பத்தூர் மாவட்டத்துக்கான தேர்தல் பொது பார்வையாளர் களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தொகை, தேர்தல் விதிமீறல்கள், தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை கண் காணிக்க மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மனோஜ் காத்ரி என்பவர் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளின் தேர்தல் பார்வையாளராகவும், பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நில்காந்த் எஸ். ஆவாத் என்பவர் திருப்பத்தூர் தொகுதிக்கும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு ஐஏஎஸ் அதிகாரியான மீனஹஜ் அலாம் என்பவர் தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது தேர்தல் பார்வையாளர் களாக நியமிக்கப்பட்டுள்ள 3 ஐஏஎஸ் அதிகாரிகளும் நேற்று முதல் தங்களது பணிகளை தொடங்கினர். முன்னதாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் தேர்தல் பொது பார்வையாளர் களை நேரில் சந்தித்து மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள், தேர்தலுக்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து விவரித்தனர்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டி யன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், தேர்தல் நடத்தும் அலுவலர்களான வந்தனா கர்க் (திருப்பத்தூர்), லட்சுமி (ஜோலார்பேட்டை), காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்) தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago