வேலூர் மாவட்டத்தில் நுண் பார்வையாளர்களுக்கான முதற் கட்ட பயிற்சி முகாமில் வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்து விளக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள 323 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் விபுள் உஜ்வால், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ஆட்சியர் சண்முக சுந்தரம் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் 648 பள்ளி வளாகங்களில் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 149 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் 12 முதல் 15 வரையிலான வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி மையங்களில் நுண் பார்வையாளர்கள் மேற் கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நேர்மை யாக நடக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தின் முடிவில், நுண் பார்வையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ், வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago