தி.மலை மற்றும் ஆரணி என2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித் துள்ளார்.
தி.மலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதனை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2 தொகுதிகளுக்கு தலா ஒரு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர் என 9 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடைசி நாளான இன்று(நேற்று) வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதனை, தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
தேர்தல் விதிகளின் படி வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறதா? மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை (இன்று) நடைபெற உள்ளது. இறுதிவேட்பாளர் பட்டியல் 22-ம் தேதி மாலை வெளியிடப்படும். அதன்பிறகு தபால் வாக்குகள் வழங்கும் பணி நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 14 ஆயிரம் பேருக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம் வரும் 26 அல்லது 27-ம் தேதி நடத்தப்படும்.
8 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் தலா 3 தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் ரூ.1.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. உரிய ஆவணம் சமர்ப்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை விடுவிக்கப்படும்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய 5 பேருக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது. அதனை, பின்பற்ற வேண்டும். தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து உள்ளது. தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வேட் பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படும்.
தி.மலை ஒழுங்குறை விற்பனைக் கூடம் மற்றும் ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி என 2 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைய உள்ளது. 2 இடங்களிலும் தலா 4 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago