திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியும் 16048 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையிலுள்ள தனியார் பள்ளி யில், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியஉள்ள தலைமை வாக்குச்சாவடிஅலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை 1,2,3, 4 ஆகியஅலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபடும்அனைத்து அலுவலர்களும் மிகுந்தவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு,சமூகஇடைவெளியையும் பின்பற்ற வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago