காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 159 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஆலந்தூரில் 8, பெரும்புதூரில் 6, உத்திரமேரூரில் 7, காஞ்சிபுரத்தில் 12 என 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 54 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று சோழிங்கநல்லூர் 5 பேர், பல்லாவரம் 5, தாம்பரம் 4, செங்கல்பட்டு 12, திருப்போரூர் 6, செய்யூர் 3, மதுராந்தகம் 9 என மொத்தம் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை 99 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி தொகுதியில் 11 பேர், பொன்னேரி(தனி) 7, திருத்தணி 4, திருவள்ளூர் 2, பூந்தமல்லி(தனி) 10, ஆவடி 10, மதுரவாயல் 12, அம்பத்தூர் 9, மாதவரம் 7, திருவொற்றியூர் 10 பேர் என மொத்தம் 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 15-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால் அங்கு தேர்தல் நடத்த 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் பலர் மாற்று வேட்பாளர்கள். ஒரே வேட்பாளர் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு வரும் 20-ம் தேதி மாலை வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மொத்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு 22-ம் தேதிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற விரும்புபவர்கள் திரும்பப் பெறலாம். அன்று மாலையே வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago