அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய - அரை நிர்வாணமாக செல்ல முயன்ற விவசாயிகள் கைது :

அரவக்குறிச்சி தொகுதியில் அரை நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பாஜக வேட் பாளர்கள் போட்டியிடும் 5 தொகுதிகளில், அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப்போவ தாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 6 விவசாயிகள் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வேனில் வந்தனர். அவர்களை 200 மீட்டர் தொலைவிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அங்கு, அவர்கள் சட்டையை கற்றிவிட்டு அரை நிர்வாணமாக சென்று மனு தாக்கல் செய்யப்போவதாகக்கூறியதால், அவர்களை போலீஸார் வேனுடன் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, கைது செய்து காவலில் வைத்தனர்.

அப்போது , அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த மக்களவை தேர்தலின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, சிறு, குறு விவசாயிகளுக்கு அளிக்கும் உதவித் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப் படும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.8,100 வழங்கப்படும் என பல வாக்குறுதிகளை அளித் தார். ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை. காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யமாட்டோம் என்றனர்.

ஆனால், புதிய வேளாண் சட்டத்தின் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வருகின்றனர். இதைக் கண்டித்து பாஜக போட்டியிடும் இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தோம். ஆனால் போலீஸார் எங்களை தடுத்து நிறுத்தி விட்டனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்