நீலகிரி மாவட்டம் உதகை ஹெச்.பி.எஃப் மற்றும் தலைக்குந்தா பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர, நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் நபர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “பொதுமக்கள் கரோனா தொற்று குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். நீலகிரி மாவட்டத்துக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பயணிகள் பேருந்துகளில் ஏறும்போது நடத்துநர்கள் கண்காணிக்கவேண்டும்.
உணவகங்களுக்கு வருபவர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லும்போது மீண்டும் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு தெரிவிக்க உணவக உரிமையாளர்கள் ஒரு நபரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago