நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலர் பா.மு.முபாரக் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரன், உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பெள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில விவசாயப் பிரிவு செயலர் வாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சகாதேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் அனீபா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது எனவும், இதற்காக மாவட்டத்தில் உள்ள திமுக தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து குழுக்கள் அமைத்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட திமுக துணைச் செயலர் ஜே.ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, செந்தில், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலர் அன்வர்கான், உதகை நகர செயலர் ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago