திருப்பூர் மாவட்டத்தில் - வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை அனுப்ப ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2021-ல் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள், அஞ்சல் துறையின் மூலம் வாக்காளர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பும் பணி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதனை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021-ல் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் தேர்தல் ஆணையம் சார்பில் அச்சடிக்கப்பட்டு தாராபுரம் (தனி) தொகுதிக்கு 6,236, காங்கயம் 7,266, அவிநாசி (தனி) 10,704, திருப்பூர் வடக்கு 11,765, திருப்பூர் தெற்கு 8,977, பல்லடம் 13,619, உடுமலை 7,734, மடத்துக்குளம் 6,191 என மொத்தம் 72,492 வந்துள்ளது. இந்த அடையாள அட்டைகள் வாக்காளர்களின் முகவரிக்கு விரைவு தபாலில் அனுப்பப்படும். இதில் வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் ஹமீது (பொது), முரளி (தேர்தல்), தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், உதவி கோட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசன் (திருப்பூர் அஞ்சல் கோட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்