விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 182 வேட்பு மனுத்தாக்கல் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டமன்ற தேர் தலில் போட்டியிட நேற்று வரை 182 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்ரல் 6-ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. நாளை (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்யகடைசி நாள் என்பது குறிப்பிடத் தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளன்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.2-ம் நாளன்று அரசியல் கட்சியினரும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 25 வேட்பாளர்கள் 43 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை 6 பேர் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று 27 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 76 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று 27 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 44 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,295 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் நாளன்று(மார்ச் 12) 9 சட்டமன்ற தொகுதிகளில் கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தலா ஒரு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

2-ம் நாளன்று 24 வேட்பாளர்கள் 24 மனுக்களை தாக்கல் செய் தனர். நேற்று முன்தினம் செவ் வாய்கிழமை 2 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

நேற்று 34 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை62 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 44 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்