தமிழக அரசின் சாதனைகளைக் கூறி - ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர் கே.வி.ராமலிங்கம், தமிழக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக, தற்போதைய எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். கடந்த 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், அதனைத் தொடர்ந்து, ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்தார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் கடந்த இரு நாட்களாக தீவிரபிரச்சாரம் செய்து வரும் கே.வி.ராமலிங்கம், நேற்று காசிபாளையம், சேனாதிபதி பாளையம், பெரிய சடையம்பாளையம், சின்ன சடையம்பாளையம், எல்.ஐ.சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட தமிழக அரசின் சாதனைகளையும், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்பதுள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் தனது பிரச்சாரத்தின்போது எடுத்துரைத்த கே.வி.ராமலிங்கம், தனக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவருடன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்