திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க எண்ணில் பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலையில் நேற்று 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த துறை வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதுபோல் மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு திரும்பிய ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை பெருமாள் சந்நிதி தெரு, வண்ணார்பேட்டை குண்டலகேசி தெரு, பாலபாக்யா நகர் 6-வது தெரு, என்.ஜி.ஓ. ஏ காலனி பகுதிகளிலும், புறநகரில் சங்கர் நகர், மானூர், காவல்கிணறு பகுதிகளிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தினமும் 10 முதல் 20 பேர் வரை உள்ளது.நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றின் முதல்வர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதியடைந்தார். அவரை பரிசோதனை நடத்தியபோது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கல்லூரி ஊழியர்கள், மாணவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பிற கல்லூரிகள், பள்ளிகளில் கரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago