வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட செயல்முறை பயிற்சி :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 3,936 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு பெரம்பலூரில் 2 இடங்களில் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 428 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு நிலை-1, நிலை-2 மற்றும் நிலை-3 அலுவலர்கள் என மொத்தம் 2,056 அலுவலர்களுக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 388 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள 1,864 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் மண்டல தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கமும், அனைத்து படிவங்களை நிரப்புவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்