புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவ ராயன்பத்தை ஊராட்சி ஆத்தியடிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துவிட்டதால் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் ஆத்தியடிப்பட்டி பகுதி மக்கள் புதுப்பட் டியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் விஸ்வநாதன், ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago