திருவண்ணாமலை மாவட்டத்தில் - 300 பேரிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கிய காவல் துறையினர் :

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ள 300 நபர் களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இதுவரை சரித்திர பதிவேட்டில் உள்ள 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சரித்திர பதிவேட்டில் உள்ள 249 பேரும், தேர்தல் நேரத்தில் கலவரம் செய்யக்கூடிய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 51 பேர் என மொத்தம் 300 பேரை அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி தேர்தல் நேரத்தில் எந்தவித குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணைய பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்