திருவண்ணாமலை மாவட்டத்தில் - 12 மையங்களில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி மற்றும் போளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அஜிதா பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் உள்ள 2,885 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 13 ஆயிரத்து 848 பேருக்கு 12 மையங்களில் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச் சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்கும் செலுத்தும் முறைகள் குறித்தும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. தேர்தல் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, போளூர் அருகேயுள்ள வசூர் கூட்டுச்சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்