வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை பயிற்சி முகாம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் 3343 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை (மார்ச் 18) பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கான கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.

தாராபுரம் பகுதியில் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. காங்கயம், நத்தக்காடையூர் பகுதியில் ஈரோடு பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, அவிநாசி சேவூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் (வடக்கு) அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூர் (தெற்கு) ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம், அவிநாசிபாளையம் ஜெய் ராம் அகாடமி மெட்ரிகுலேஷன், உடுமலைப்பேட்டை விசாலாட்சி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மடத்துக்குளம் தொகுதி உடுமலைப்பேட்டை - பழநி சாலை ஆர்.ஜி.எம்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஆட்சியர் பேசும்போது, "பயிற்சி நடைபெறும் இடங்களில் செல்லும் வழி குறித்து விளம்பர பலகை அமைத்தல், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தல், தடையில்லா மின்சார வசதி, பயிற்சிக்கான கையேடுகள், மாதிரி வாக்குச் சாவடி மையம், வருகை பதிவேடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், தபால் வாக்குச் சீட்டுகளுக்கான படிவங்களைப் பெறுதல், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்தல், கரோனா தடுப்பூசி போடுவதற்கான மையங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். பணி நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிந்து பயிற்சியில் பங்கேற்க வேண்டும்" என்றார்.

வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்