காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 129 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சி மாவட்டத்தில் காஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 7 பேர், உத்திரமேரூர் 7 பேர், பெரும்புதூர் 3 பேர், ஆலந்தூர் 10 பேர் என மொத்தம் 27 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் செங்கை மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 7 பேர், பல்லாவரம் 7 பேர், தாம்பரம் 8 பேர், செங்கல்பட்டு 6 பேர், திருப்போரூர் 2 பேர், செய்யூர் 5 பேர், மதுராந்தகம் 3 பேர் என மொத்தம் 38 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி 4 பேர், 15-ம் தேதி 50 என ஏற்கெனவே 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் 4 பேர், 6 சுயேச்சை வேட்பாளர்கள் என 10 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஒரு சிலர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். ஆனால் இன்று (மார்ச் 16) புதன்கிழமை என்பதால் அதிகம் பேர் மனு தாக்கல் செய்ய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago