கரோனா பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த டிசம்பர் 2019 முதல் கரோனா பெருந்தொற்று நோய்உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமி ழகத்தில் கடந்த வருடம் உச்சத்தில் இருந்த கரோனா நோய் தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்த நிலையில் இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகி றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டும் தடுப்பூசி களை வழங்கியும் வருகிறது.
பொதுமக்கள் கரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாது காத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக கூட்டங்களுக்கு செல் வதை தவிர்த்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களையும் பின்பற்ற செய்து நோய் தொற்றிலிருந்து பொதுமக் களை பாதுகாத்து வருகிறது.
தற்போது, கரோனா தீவிரமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு மேற்கண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவற்றை பின்பற்றதவறும் பட்சத்தில் பொதுமக்க ளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி அரசு அபராதம் விதிக்க கடமைப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும் மக்களுக்கு ரூ.200ம், பொது இடங்களில் எச்சில்துப்பினால் ரூ.50-ம் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க தவறும் நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
வணிக நிறுவனங்கள் தொழிற் சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும்அதிக மக்கள் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களைச் சார்ந்த உரிமையாளர்களும் கரோனா தொற்று நோயிலிருந்து தங்களது பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க முழுமையாக கடமைப்பட் டுள்ளனர்.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் கரோனா நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியினை கடைபிடிக்க தவறும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago