விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடி ஆகியோர் நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கலின்போது அவர்கள் அளித்துள்ள சொத்து விவரப்பட்டியல் வருமாறு:
சி.வி.சண்முகத்தின் சொத்து விவரங்கள்:
சி.வி.சண்முகம் தனக்கு அசை யும் சொத்துக்களாக ரூ12,08,409 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மனைவிக்கு ரூ.31,37,918 , அவரது தாயாருக்கு ரூ.60,64,152, மகன் ரூ.2,37,379, மகளுக்கு ரூ.3,22,347 வங்கி மற்றும் காப்பீட்டுத் தொகை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ரூ.17.85 லட்சத்திற்கு அசையா சொத் துக்கள் இருப்பதாகவும், அவரதுமனைவிக்கு ரூ.2.10 கோடிக்கு அசையா சொத்துகள் உள்ளதாகவும், தனிநபர் கடனாக மனை விக்கு ரூ.10 லட்சம்,தாயாருக்கு ரூ.25 லட்சம் உள்ளதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பொன்முடியின் சொத்து விவரங்கள்:
பொன்முடி கையிருப்புத் தொகை ரூ.3 லட்சம் வைத்துள்ளார். அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.1 ,19,73,410, அவரது மனைவி கையிருப்பு தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் அசையும் சொத்துக்களாக ரூ.10,10,47,238 வைத்துள்ளார். அசையா சொத்துக்களாக பொன்முடிக்கு ரூ.98,75,500 மதிப்பிலும் மனை விக்கு ரூ.5,13,11,843 மதிப்பிலும் உள்ளது. மேலும் பொன்முடிக்கு ரூ.2.40 லட்சம், அவரது மனை விக்கு ரூ.4,79,85,175 கடன் உள்ளது. தன் மகன்கள் இரு வருக்கும் திருமணமாகி, சொந் தமாக வருவாய் ஈட்டுவதால் அவர்கள் தனது வருவாயை நம்பி இல்லை என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago