திருப்பத்தூர் அருகே வேலங்குடியில் பிரசித்தி பெற்ற உறங்காப்புளி கருப்பர் கோயில் திருவிழா மார்ச் 8-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக காரைக்குடி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து வேலங்குடிக்கு நேற்று சென்ற அரசு பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர்.
அப்பேருந்து கோயில் அருகே சென்றபோது தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த இன்ஸ் பெக்டர் மனோகரன் பேருந்தை தடுத்தார். அவரைப் பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பினார்.
இதையடுத்து டிஎஸ்பி பொன்ரகு தலைமையிலான போலீஸார் அவரை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் ஓட்டுநர் முருகேசன் போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் திருப்பத்தூரில் இருந்து பேருந்தை தாறுமாக ஓட்டியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
ஓட்டுநர் முருகேசனை தற் காலிகப் பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தர விட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago