கரூரில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக திமுக, அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப் போது அப்பகுதியில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர்.
இதுகுறித்து தொகுதி பறக் கும் படை குழு அலுவலர் சண்முக சுந்தரம், கரூர் நகர போலீஸில் அளித்த புகாரின்பேரில், தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகளை வெடித்ததாக திமுகவினர் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்
அதிமுக மீது வழக்கு
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடங்கிபட்டியில் இருந்து ஊர்வலமாக கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக லைட்ஹவுஸ் முனை அருகே அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர்.இதுகுறித்து தொகுதி பறக்கும் படை குழு அலுவலர் அமுதா அளித்த புகாரின்பேரில் அதிமுகவினர் மீது கரூர் நகர போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago