மாநில சுயாட்சியை விட்டுக்கொடுத்தவர் முதல்வர் பழனிசாமி : திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மாநில சுயாட்சியை விட்டுக்கொடுத் தவர் முதல்வர் பழனிசாமி என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா அறிமுக கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிமுக மாவட்ட துணைச் செய லாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர், முன் னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மணி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வநம்பி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து, வேட்பாளர் கு.சின்னப்பாவை அறிமுகப்படுத்தி வைத்து திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியது:

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நீட் தேர்வை தமிழ கத்தில் அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டியை அனுமதிக்கவில்லை. மாநில சுயாட்சியை விட்டுகொடுக் கவில்லை. ஆனால் நீட், ஜிஎஸ் டியை பழனிசாமி அனுமதித்ததுடன், மாநில சுயாட்சியையும் விட்டு கொடுத்துள்ளார். அப்படி இருக்கை யில் ஜெயலலிதா ஆட்சியை இவர் எப்படி தர முடியும்.

சர்க்காரியா கமிஷனில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஊழல் செய்தார் என குறிப்பிடப் பட்டுள்ளதாக பழனிசாமி தெரிவித் தார். நானும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முழுமையாக படித்துள்ளேன். அதில் அப்படி ஒரு வாசகம் எங்கு குறிப்பிடப் பட்டுள்ளது விளக்கம் தாருங் கள் என்று கேட்டும் இதுவரை பதிலில்லை.

10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுகவை ஊழல் கட்சி என சொல்கிறார் பழனிசாமி. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்