திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் 4 பேர் நேற்று சரணடைந்தனர்.
திருச்சி மேலஅம்பிகாபுரத் தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். ரவுடியான இவர் கடந்த 14-ம் தேதி இரவு அப்பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முத்துக் குமார்(28), சரவணன்(21), அரியமங்கலம் ஜெகநாத புரத்தை சேர்ந்த ரஞ்சித்(19), அரியமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த கோபிநாத்(20) ஆகிய 4 பேர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago