ஆசிரியைகளுக்கு அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் : தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் நா.சண்முக நாதன், மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ், மாநில பொதுக் குழு உறுப்பினர் ந.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் சு.அங் கப்பன், மாவட்ட துணைத்தலைவர் ம.சிவா, மாவட்ட துணைச் செயலாளர் து.அந்தோனிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகளை முறையாக வழங்க வேண்டும். தேர்தல் பணி யில் ஈடுபடும் ஆசிரியைகளுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 சதவீதம் அனைவரும் வாக்க ளிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோ ருக்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதியையும், பாதுகாப்பு வசதி யையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE