மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என்று யூகத்திற்கு உரிய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலரால் தரப்பட்ட தகவல் களின் அடிப்படையில், தபால் வாக்கு பெறத் தகுதியானவர்களின் வீடுகளுக்குச் சென்று, 12- டி விண்ணப்பங்கள் அளிக்கப் பட்டுள்ளன.
இந்த படிவத்துடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்து ரைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்றாவணங்கள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சான்றா வணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் அவ்விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, தபால் வாக்கு அளிக்கப்படும்.
அதன் பின்னர், வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் குழுவினர், குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று தபால் வாக்குகளைப் பெறுவார்கள். இக்குழுவினர் வருவதற்கு முன்பாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, அதனை பார்வையிட தகுதியான ஒருவரைவாக்காளர்களே தேர்வு செய்துபார்வையிடச் செய்யலாம். வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்குச் செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப் படும். வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் கொண்ட குழுவோடு ஒரு நுண் பார்வையாளரும் செல்வர்.
தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் காணொலியாக பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அறிவித்து இரண்டாவது முறையும் வருகை தருவர்.
அதிகாரிகளது இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் தபால் வாக்கு அளிக்கஅனுமதி மறுக்கப்படும். மேலும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago