ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கள்ளிவலசு கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட கே.வி.ராமலிங்கம், 2010-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாகவும், 2011-16-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சு.முத்துசாமியை, 4906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ.வாகத் தேர்வு பெற்றார். இந்நிலையில் ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக கே.வி.ராமலிங்கம் (64) மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் நேற்று தனது வேட்புமனுவை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் சைபுதினிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ தென்னரசு உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago