பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.வரதராஜன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பாரதி, சுப்பையா, ராமசாமி, குணசேகரன், பிரேமா, யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லதுரை வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி சந்தியாகு, சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி, சாலையோர வியாபாரிகள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வட்டியில்லாத வங்கி கடனை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்கி வியாபாரம் செய்யும் இடத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago