கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொது இடம் மற்றும் கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.500 அபராதமும், திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில், உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago