கடந்த 2019-20-ம் ஆண்டு சர்வதேசஒலிம்பியாட் நிறுவனம் நடத்தியபோட்டித் தேர்வுகளில் அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 பதக்கங்களை வென்றனர்.
மாணவர்கள் ஆதித்யா, மோரஸ் மதி, வேல் சதீஷ், விஜய அரசன், தர்ஷினி, ஜனனி, தனிஷ், தங்கபால கிஷோர், ரேணுகா, விஜேஷ், ஆஷிரா, ஜெரின், ஜெப்ரின் சாம்ராஜ், சுபாஷினி, ஜோஷ்வா, கிருபாகரன், தீபக், மேக உதயன், ராஜேஷ்வர் ஆகியோர் தேசிய அளவிலான அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றனர். அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் 17 பேர் தங்க பதக்கங்களையும், 16 பேர் வெள்ளி பதக்கங்களையும், 16 பேர் வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.
கணித ஒலிம்பியாட் போட்டியில் ஆதேஷ் சரவணன், சன்சிகா,மைசினியா சக்தி, வர்ஷினி, மோகன் கிஷோர், மதி, சுஜித், கதிர்,ஜெனிஷா, கிரேஷ்லின், தர்ஷினி, தீபிகா, ராஜஅபிநயா, ஜாய்ஷினி, சிவசங்கர், ஜெயராம் சுந்தர், தினேஷ், பிரதீபா, கணேசபாலா, பிரவின், ஜெய் பிரகதிஷ், ஷாரங்கதேவி ஆகியோர் தங்கப்பதக்கம் வெற்றனர். கணித ஒலிம்பியாட்டில் மொத்தம் 20 பேர் தங்கம், 20 பேர்வெள்ளி, 21 பேர் வெண்கல பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்ற மாணவர் களை பள்ளி முதல்வர் மகேஷ்வரிராஜசேகரன், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago