3,300 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,300 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த ஊழி யர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 2 நாட்கள் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 200 பெண்கள் உட்பட சுமார் 800 வங்கி ஊழியர்கள் பங் கேற்றுள்ளனர். இதனால், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டது.

பணம் மற்றும் காசோலை பறிமாற்றம் தடைபட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் நாளான நேற்று சுமார் 10 கோடி மதிப்பில் பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ஏடிஎம் சேவையும் படிப்படியாக பாதிக்க தொடங்கி உள்ளது.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக் கப்பட்டன.

இந்தியாவில் பொதுத் துறை வங்கிகள் தனியார்மய மாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் உள்ள 240 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக வங்கிகள் விடுமுறை என்ற நிலையில், ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதற்கிடையில், நேற்று தொடங்கி இன்றும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால், பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்