திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உட்பட - 5 அதிமுக வேட்பாளர்களும் மனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உட்பட 5 அதிமுக வேட்பாளர்களும் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியில் ஆரணி, செங்கம், போளூர், கலசப் பாக்கம் மற்றும் செய்யாறு ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக போட்டி யிடுகின்றன. ஆரணி தொகுதியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், 2-வது முறையாக போட்டியிடுகிறார். இவர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும்அலுவலருமான பூங்கொடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல், போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர்ரமேஷிடம் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர், போளூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

கலசப்பாக்கம் தொகுதியில் 2-வது முறையாக பன்னீர்செல்வம் எம்எல்ஏ, செய்யாறு தொகுதியில் 2-வது முறையாக தூசி.கே. மோகன் எம்எல்ஏ மற்றும் செங்கம் தொகுதியில் முதன்முறையாக மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் நைனாக்கண்ணு ஆகி யோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 5 அதிமுக வேட்பாளர்களும் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்