வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள மெட்டுக்குளம் பகுதியில் வட்டார வளர்ச்சிஅலுவலர் சாந்தி தலைமை யிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற ரூ.1.91லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தனது வீட்டுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கற்கள் வாங்க காரில் சென்றது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காட்பாடி வாட்டாட்சியர் பாலமுருகன் வசம் ஒப்படைத்தனர். பின்னர், அந்தப் பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago