மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தினால் - சிறிய கனரக இயந்திரம் பறிமுதல் செய்யப்படும் : நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் விவசாயப் பயன்பாட்டுக்கு அனுமதி பெறப்படும் சிறிய கனரக இயந்திரம் பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் மூலமாக விவசாயப் பயன்பாட்டுக்காக மட்டும் சிறிய கனரக இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக பெறப்படும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தினை தொடர்புடைய தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மூலமாக ஆய்வு மேற்கொண்டு, விவசாயப் பயன்பாட்டை உறுதிசெய்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களிலேயே உதவி இயக்குநர் நிலையில் குறிப்புடன் அனுமதி வழங்கலாம் எனவும், விவசாயம் தவிர, இதர இனங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும்.

மேலும், விவசாயப் பயன்பாட்டுக்காக பெறப்படும் சிறிய கனரக இயந்திரத்தை மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் தொடர்புடைய தனியார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்க்ப ட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்