நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக மையம் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உதகை, கூடலூர் மற்றும்குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் தொடர்பான செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்கு விசால் சனப் மற்றும் கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அமர்சிங்நெகரா ஆகியோர் தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தேர்தல் செலவினப் பார்வையாளர் (உதகை சட்டப்பேரவை தொகுதி) விசால் சனப்,ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தை நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பறக்கும் படைக் குழுவினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், சிவிஜில் மற்றும் இலவச தொலைபேசி எண்ணில் பெறப்படும் புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கட்டுப்பாட்டு அறை நோடல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago