செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 42 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சமூக ஊடகங்களில் வெளியாகும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்காணிக்க ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு எஸ்.சிவபிரசாத், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு மனிஷ் குமார் சவுடா, செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு பியூஸ் கட்டியார் ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் அவர்களுக்கு விளக்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago