தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸார் விருப்ப மனு அளிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏப். 6-ம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பணியாற்ற விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸார் விருப்ப மனு அளிக்கலாம். அவ்வாறு தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப மனுவுடன், வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைத்து வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் : 044 29540444, காவல் உதவி ஆய்வாளர்கள் சங்கர் - 9597437825, பிரேம்குமார் - 7538877769 (தேர்தல் பிரிவு) ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago