கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு - பிற மாவட்ட புகார்களே அதிகம் வருகின்றன :

By செய்திப்பிரிவு

பிற மாவட்டப் புகார்களே அதிகம் வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புலம்பல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக வாக்காளர்கள் புகார் அளிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இலவச அழைப்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக, இலவச அழைப்புகள் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 54 புகார்கள் வரப்பெற்றுள்ளன. புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒரு புகார்மட்டும் நிலுவையில் உள்ளது.

புகார் அளிப்பவர்களில் பெரும்பாலானோர் மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தான் புகார் அளிக்கின்றனர். எங்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண், வேறு மாவட்டங்களுக்கும் பரவியிருப்பதால், இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு வரும் புகார்களை, அந்தந்த மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளச் செய்வதே பெரும் பணியாக உள்ளது. புகார்களில் தேர்தல் தொடர்பான புகாருக்கு பதிலாக தண்ணீர் வரவில்லை, ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை, சாலை சரியில்லை என்ற புகார் களை பொதுமக்கள் கூறுகின்றனர் என நொந்து போய் புலம்புகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாடு அறை அலுவலர்கள்.

ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை, சாலை சரியில்லை என்ற புகார்களை பொதுமக்கள் கூறுகின்றனர் என நொந்து போய் புலம்புகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்