தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் வேட் பாளராக தென்காசி மாவட்ட காங் கிரஸ் தலைவர் பழனி (69) அறிவிக்கப்பட்டுள்ளார். சுரண்டை அருகே ஆலடிப்பட்டியைச் சேர்ந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 9-ம் வகுப்பு படித்துள்ளார். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் (60) அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மரயபுரத்தைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். எம்பிஏ படித்துள்ளார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரூபி மனோகரனுக்கு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago