‘கரோனா தொற்று, பள்ளிகள் மூடலால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு’ :

கரோனா தொற்று காரணமாக குழந்தை தொழிலாளர் நிலை குறித்து தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் கணக்கெடுப்பு நடத்தியது. இதுதொடர் பாக தயாரிக்கப்பட்ட புத்தகம் தஞ்சாவூரில் நேற்று வெளியிடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல அமைப்பாளர் பாத்திமாராஜ் முன்னிலை வகித்தார்.

புத்தகத்தை மாநில அமைப் பாளர் கருப்பசாமி வெளியிட, தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு செயலாளர் ஜெயபால் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர்கள் சியாமளா (தஞ்சாவூர்), ஜீவா(திருவாரூர்), தனம்(காரைக்கால்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கருப்பசாமி கூறியது: கரோனா நெருக்கடியின் விளைவாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாங்கள் குழந்தை தொழிலாளர்களின் நிலை குறித்து கணக் கெடுப்பு நடத்தினோம். இதில், கரோனா தொற்று மற்றும் பள்ளிகள் மூடல் ஆகியவற்றின் தாக்கத்தால் வேலை செய்யும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் தினமும் 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கிறார்கள். பெரும் பாலானோர் உடல், மன மற்றும் வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள் கின்றனர்.

குழந்தைகள் வேலை செய்வதற்கு பொருளாதார நெருக்கடி தான் காரணம். எனவே, அனை வருக்கும் குறைந்தபட்ச வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஏழைக் குடும்பங்கள் கண்ணியமாக வாழ்வதை உறுதிசெய்யும் வகையில், விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

குழந்தை தொழிலாளர் சட்டங்கள், குழந்தைகளுக்கு நலன் பயக்கும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE