தி.மலை மாவட்டத்தில் இன்று முதல் - 9,51,388 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,51,388 பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத் திரை வழங்கும் பணி இன்று தொடங்குகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அல்பென்டசோல் மாத்திரை வழங்கும் பணி மார்ச் 15 (இன்று) முதல் 20-ம் தேதி வரையும் மற்றும் மார்ச் 22 முதல் 27-ம் தேதி வரை என இரண்டு சுற்றுகளாக (செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர்த்து) நடைபெற உள்ளது.

ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பென்டசோல் திரவம் வழங்கப்படும். 2 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 19 வயது வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு மாத்திரை வழங்கப்படும். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை தவிர்த்து) ஒரு மாத்திரை வழங்கப்படும்.

அனைத்து அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் என மொத்தம் 2,636 இடங் களில் அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரிடையாக வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு வரும் 29-ம் தேதி வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,45,208 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 2,06,180 பெண்கள் என மொத்தம் 9,51,388 பேருக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல்பென்டசோல் மாத் திரையை உட்கொள்வதால் குடற் புழு நீக்கம் செய்தவதற்கும், ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளலாம். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். மென்று சாப்பிடக் கூடிய அல்பென்டசோல் மாத்திரையை அச்சமின்றி உட்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்