மின்விநியோகம் செய்வதற்காக, ஆவடியில் ரூ.144 கோடி மதிப்பீட்டில் தரை வழியே மின்கேபிள் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
வீடுகள், கடைகள் உள்ளிட்டகுறைந்த மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தாழ்வழுத்தப் பிரிவிலும், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு உயரழுத்தப் பிரிவிலும் மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது.
சென்னையில் தரை வழியே கேபிள் அமைத்தும் புறநகர் பகுதிகளில் மின்கம்பங்கள் மூலமும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில் மழை, புயலின் போது மின்கம்பம் சாய்தல், மின்கம்பிகள் அறுதல் போன்றவற்றால் மின்தடை ஏற்படுவதோடு மின் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதையடுத்து, மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படும் இடங்களில் தரை வழியே கேபிள் அமைத்து மின்விநியோகம் செய்யும்பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டம்ஆவடியில் ரூ.144 கோடி மதிப்பீட்டில் 88 கி.மீ. தூரத்துக்கு உயரழுத்தப் பிரிவிலும், 630 கி.மீ. தூரத்துக்கு தாழ்வழுத்தப் பிரிவிலும் கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago