திருவள்ளூர் - பெரும்புதூர் மாநில நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து பெரும்புதூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், சத்திரம், செங்காடு, மண்ணூர் கூட்டுச்சாலை, தொடுகாடு வழியாக செல்கிறது. இந்தச் சாலை வழியாக பெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன், இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் திருவள்ளூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களை அழைத்துச் செல்லும் தொழிற்சாலை வாகனங்கள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.
அத்துடன் மாமல்லபுரம் - எண்ணூரை இணைக்கும் வகையில்ஆறு வழி சாலை அமைக்கப்படும்என கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும் சிங்கப்பெருமாள்கோயில் - செங்கல்பட்டு இடையேதான் இச்சாலை அமைக்கும் பணிநிறைவு பெற்றுள்ளது. எஞ்சியபகுதிகளில் இப்பணி நிறைவடையவில்லை.
இச்சாலையில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளதோடு, குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால், இச்சாலையில் தினமும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துஉள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இச்சாலையை உரிய முறையில் விரிவாக்கம் செய்து செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago