காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல்விதிமுறைகளை மீறி அனுமதியில்லாமல் கூட்டம் கூடியதாக திமுக, அதிமுககூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 400 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று சாலவாக்கம், உத்திரமேரூர் மற்றும் பெருநகர் பகுதிகளில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உடன் சென்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாகவும் அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் மீது சாலாவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திமுக வேட்பாளராக தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் க.சுந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று பல்வேறு இடங்களில் உள்ள அண்ணா, பெரியார், காமராஜர்சிலைகளுக்கு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் திமுக கூட்டணிக் கட்சியினர் 200 பேர் மீது சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago