வாக்களிக்க மாற்று ஆவணங்கள் எவையெவை? : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்றுஆவணங்களைக் கொண்டு வாக்க ளிக்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண்குராலா தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்குப் பதிவின் போது வாக்கா ளர்கள் வாக்களிக்க தங்களது அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாக்காளர் அட்டையை பயன்படுத்த வேண்டும். அதை பயன்படுத்த இயலாதவர்கள் மாற்று ஆவணங்களாக ஆதார் அட்டை, 100 நாள் வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, புகைப் படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல சேமிப்பு புத்தகம், தொழி லாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட அடை யாள அட்டை, மக்களவை, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக் கலாம்.

வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடி மையம், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் வரிசை எண், வாக்குப் பதிவு நாள்,நேரம் அடங்கிய வாக்களர் தகவல்சீட்டு, தேர்தல் நடைபெறும் 5 நாட்களுக்கும் முன் வாக்காளர்க ளுக்கு வழங்கப்படும். அவ்வாறுவழங்கப்படும் தகவல் சீட்டு வாக்களிக்க வாக்காளரின் அடையா ளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்