கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன் பாட்டில் இருந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் சுருக்குவலை பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர் தரப்பினர் தங்களுக்கு உரிய தீர்வு காண வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் தடையை மீறி சுருக்குவலை பயன்பாட்டில் இருந்த படகுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது.
இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சுருக்குவலை பயன் பாட்டிற்கு ஆதரவு கோரியும், மாவட்ட நிர்வா கத்தை கண்டித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் நடைபெற்றது. மீனவர்கள் மீன்பிடி பணிக்கு செல்லாமல் இருந்து வந்தனர். தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் சம்பந்தப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுருக்கு வலைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக தேவனாம்பட்டினம் கிராமத்தில் தேர்தல் புறக் கணிப்பு தொடர்பாக நேற்று ஆட்டோவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல றிந்த டிஎஸ்பி சாந்தி உத்தரவின்பேரில் போலீஸார் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு தேர்தல்புறக்கணிப்பு அறிவிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதனையடுத்து போலீஸார் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அப்பகுதி மீனவர்கள் தேவனாம்பட்டினம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் சமயத்தில் இது போன்று பிரச்சாரம் செய்யக்கூடாது என போலீஸார் தெரிவித் தனர். தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு போலீஸார் ஆட்டோவை விடுவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago