விருதுநகர் மாவட்டத்தில் 55,000 புதிய வாக்காளர்கள் : வாக்குகளைப் பெற வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்

By செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 55 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களது கணிசமான வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால் இளம் வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரம் செய்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலின்படி ராஜபாளையம் தொகுதியில் 2,38,701 வாக்காளர்களும், வில்லி புத்தூர் தொகுதியில் 2,49,580 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2,51,502 வாக்காளர் களும், சிவகாசி தொகுதியில் 2,60,941 வாக்காளர்களும், விருது நகர் தொகுதியில் 2,24,327 வாக் காளர்களும் உள்ளனர்.

அருப்புக்கோட்டை தொகுதி யில் 2,22,980 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 2,20,720 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 8,12,683 ஆண் வாக்காளர்கள், 8,55,875 பெண் வாக்காளர்கள், இதர வாக்கா ளர்கள் 193 பேர் என மொத்தம் 16,68,751 வாக்காளர்கள் உள்ள னர்.

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அதன்படி ராஜபாளையம் தொகுதியில் 7,300 பேரும், வில்லிபுத்தூர் தொகுதியில் 7,100 பேரும், சாத்தூர் தொகுதியில் 10,200 பேரும், சிவகாசி தொகுதியில் 7,800 பேரும், விருதுநகர் தொகுதியில் 8,600 பேரும், அருப்புக்கோட்டை தொகுதியில் 6,700 பேரும், திருச்சுழி தொகுதியில் 7,350 பேரும் என சுமார் 55 ஆயிரம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையான வாக்காளர்கள் முதல் வாக்கா ளர்கள். இந்த வாக்காளர்களின் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் பல்வேறு புதிய வியூ கங்களை வகுத்து வருகின்றன.

அதன்படி முகநூல், வாட்ஸ்-ஆப், ட்விட்டர், ஸ்கைப், டெல கிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கவரும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. மேலும் புதிய மற்றும் இளம் வாக்காளர் களின் வாக்குகளைப் பெற வேலைவாய்ப்பு, கல்விக் கடன், தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களையும், மகளிர் வாக்குகளைப் பெற இலவச எரிவாயு, சுய உதவிக் குழுக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளையும் அளித்து வரு கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்